Ashes 2023: வித்யாசமான ‘ப்ரம்பெல்லா’ ஃபீல்டிங் செட்டப்… க்வாஜா விக்கெட் எடுக்க ஸ்டோக்ஸ் விரித்த வலை.!

Brumbella

ஆஷஸ் தொடரில் க்வாஜா விக்கெட்டை வீழ்த்த, வித்யாசமான ஃபீல்டிங்கை அமைத்த பென் ஸ்டோக்ஸின் ‘ப்ரம்பெல்லா’ வைரலாகி வருகிறது.

ஆஷஸ் தொடர்:

கிரிக்கெட்டில் பெரிதாக பேசப்படும் ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் கடந்த ஜூன் 16 இல் இங்கிலாந்தின் பர்மிங்காமில் தொடங்கியது. உலகக்கோப்பை தொடரை போல் கருதப்படும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில், முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

Joeroot century
Joeroot century [Image- Skysports]
பாஸ்பால் ஆட்டம்:

இதன்படி இங்கிலாந்து முதல் நாளில் முதல் இன்னிங்சில் அதிரடியாக(BazBall)  விளையாடி 393/8 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தது. ஜோ ரூட்(118 ரன்கள்) சிறப்பாக விளையாடி சதமடித்தார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் வார்னர் 9 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் க்வாஜா நிதானமாக விளையாடி சதமடித்தார்.

kavaja century
kavaja century [Image- Twitter/@ICC]

க்வாஜா அற்புதம்:

நீண்ட நேரம் இங்கிலாந்து பவுலர்களை திணறடித்து க்வாஜாவின் விக்கெட்டை எடுக்கமுடியாமல் இங்கிலாந்து அணி தடுமாறியது. பின்னர் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், க்வாஜாவின் விக்கெட்டுக்காக வித்யாசமான முறையில் ஃபீல்டிங் வியூகம் அமைத்தார். அதாவது க்வாஜாவுக்கு கவர் திசையில் 3 பீல்டர்களும், மிட் விக்கெட் திசையில் 3 பீல்டர்களும் என ஸ்டோக்ஸ் நிற்கவைத்தார், அதன்பின் ராபின்சன் வீசிய யார்க்கர் பந்தை க்வாஜா விட்டுவிட அது ஸ்டம்பில் நேராக தாக்கியது.

Brumbella ஃபீல்டிங் வியூகம்:

க்வாஜா 141 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்தபோது, தனது விக்கெட்டை இழந்தார். இதன்மூலம் இந்த நூற்றாண்டில் இங்கிலாந்து மண்ணில், ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். பென் ஸ்டோக்ஸின் இந்த வித்யாசமான ‘Brumbella’ (ப்ரம்பெல்லா) முறை கிரிக்கெட் உலகில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Stokes Brumbella
Stokes Brumbella [Image- icc]

இதுவரை கிரிக்கெட்டில் யாரும் பார்க்காத புதிய வியூகமான இந்த ப்ரம்பெல்லா, குடையை தலைகீழாக வைத்தது போன்ற வடிவில் ஃபீல்டிங் வியூகம் அமைந்துள்ளது. க்வாஜாவின் சதத்துடன் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 386 ரன்கள் குவித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்துள்ளது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ள நிலையில் இங்கிலாந்து அணி 35 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்