கடலூர் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இன்று காலை கடலூர் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கம் கிராமத்தில் பண்ருட்டியிலிருந்து கடலூருக்குச் சென்ற தனியார் பேருந்து முன் டயர் எதிர்பாராதவிதமாக வெடித்து கடலூரிலிருந்து பண்ருட்டி வந்த தனியார் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் 80 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த 80 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
மேலும், படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50,000 ரூபாயும், லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 25,000 ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
unknown node