Asian Cup 2023 : சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை எளிதில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது பாகிஸ்தான்.!

Published by
மணிகண்டன்

2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டி நடைபெற்றது. இதில் குரூப் ஏயில் உள்ள பாகிஸ்தான் மற்றும் குரூப் பியில் உள்ள வங்கதேசம் ஆகிய அணிகள் மோதின.  இந்த போட்டியானது இலங்கையில் உள்ள லாகூர் மைதானத்தில் நேற்று மதியம் 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய வங்கதேச அணி 38.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 193 ரன்கள் எடுத்திருந்தது.

வந்தேச வீரர்கள் தொடர்ந்து குறைவான ரன்களில் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். அதிகபட்சமாக  கேப்டன் ஷாகிப் அல் ஹசன் 53 ரன்களும், முஷ்பிகுர் ரஹீம் 64 ரன்களும் எடுத்து இருந்தனர். அடுத்து முகமது நைம் 20 ரன்களும், மெஹிதி ஹசன் மிராஸ் ரன் எதுவும் எடுக்காமலும், லிட்டன் தாஸ் 16 ரன்களும், தவ்ஹித் ஹிரிடோய் 2 ரன்களும்,ஷமிம் ஹொசைன் 16 ரன்களும், அபிஃப் ஹொசைன் 12 ரன்களும் எடுத்து இருந்தனர்.

பாகிஸ்தான் அணி சார்பாக ஹரிஸ் ரவுப் 4 விக்கெட்களையும், நசீம் ஷா 3 விக்கெட்களையும், ஷஹீன் அப்ரிடி, ஃபஹீம் அஷ்ரப், இப்திகார் அகமது ஆகியோர் தலா 1 விக்கெட்களையும் வீழ்த்தி இருந்தனர்.

50 ஓவரில் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிதானமாக விளையாடியது. அதிகபட்சமாக இமாம்-உல்-ஹக் 78 ரன்கள் எடுத்து இருந்தார், முகமது ரிஸ்வான் 63 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் அணியை வெற்றி பெற செய்தார்.  ஃபகார் ஜமான் 20 ரன்களும், பாபர் ஆசம் (கேட்ச்) 17 ரன்களும் எடுத்து இருந்தனர். ஆகா சல்மான் 12 ரன்கள் எடுத்து இறுதி வரையில் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.

வங்கதேச அணி சார்பாக தஸ்கின் அகமது, ஷோரிஃபுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா 1விக்கெட் எடுத்து இருந்தனர். இறுதியாக 39.3 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழந்து 194 ரன்கள்எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“இன்ஸ்டாவில் ரீல்ஸ் பாக்காதீங்க…AI கற்றுக்கொள்ளுங்கள்”- அட்வைஸ் கொடுத்த CEO அரவிந்த் ஶ்ரீனிவாஸ்!

டெல்லி :  இன்றயை காலத்தில் சோஷியல் மீடியா எந்த அளவுக்கு வளர்ந்து கொண்டே இருக்கிறதோ அதே அளவுக்கு AI பயன்பாடு…

25 minutes ago

இவங்க தான் இந்தியாவோட பெஸ்ட் வீரர்கள்! ரவி சாஸ்திரி தேர்வு செய்த 5 பேர்?

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, 2025 ஜூலை 21 அன்று “The…

1 hour ago

கூட்டணிக்கு கடை விரிக்கும் எடப்பாடி – அமைச்சர் துரைமுருகன் கிண்டல்!

சென்னை : தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஜூலை 22 (இன்று) சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில், அதிமுக…

2 hours ago

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் திருவிழா : விருதுநகர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

விருதுநகர் : மாவட்டத்தில், 2025 வரும் ஜூலை 28-ஆம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில்…

3 hours ago

அஜித் வழக்கு : ‘ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கணும்’ தமிழக அரசுக்கு முக்கிய உத்தரவு போட்ட ஐகோர்ட்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (29), 2025 ஜூன் 27…

3 hours ago

வங்கதேச விமான விபத்து : தொடரும் சோகம்…பலி எண்ணிக்கை 27-ஆக உயர்வு!

டாக்கா : சமீபகாலமாக விமான விபத்து நடப்பது என்பது அதிகமாகி வருகிறது. ஏற்கனவே, கடந்த மாதம் அகமதாபாத் விமான நிலையத்திற்கு…

4 hours ago