இவர்களின் ஓய்வூதியம் 100% உயர்வு – பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அசத்தல் அறிவிப்பு!

Default Image

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடுவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்குவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ),முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முன்னாள் நடுவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.இது தொடர்பாக,பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா கூறுகையில்: “எங்கள் முன்னாள் அல்லது தற்போது இருக்கும் கிரிக்கெட் வீரர்களின் நலனுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.பல ஆண்டுகளாக நடுவர்கள் அளித்த பங்களிப்பை BCCI மதிக்கிறது.அந்தவகையில்,அவர்களின் ஓய்வூதியத் தொகையை அதிகரிப்பது அதன் ஒரு படியாகும்.

அதன்படி,முன்னாள் கிரிக்கெட் வீரர்கள்(ஆண்கள்&பெண்கள்) மற்றும் நடுவர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கப்பட்வுள்ளது.அதன்படி,மொத்தம் சுமார் 900 பணியாளர்கள் ஓய்வூதிய திட்டத்தின் பலனைப் பெறுவார்கள்.அதில் 75% க்கும் அதிகமான பயனாளிகள் 100% உயர்வு பெறுவார்கள்”,என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில்:“எங்கள் முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் நிதி நலனில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.ஏனெனில்,வீரர்கள் உயிர்நாடியாக இருக்கிறார்கள் மற்றும் அவர்களின் விளையாடும் நாட்கள் முடிந்தவுடன் ஒரு வாரியமாக அவர்களுக்கு பக்க பலமாக இருப்பது நமது கடமையாகும்.அதைப்போல,நடுவர்களின் பங்களிப்பை உண்மையிலேயே பிசிசிஐ மதிக்கிறது”,என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்