StuartBroad yuvi [File Image]
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்த இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் ப்ராடுக்கு, யுவராஜ் சிங் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஸ்டூவர்ட் பிராட், நடந்து வரும் ஆஷஸ் தொடருடன் ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். ஆஷஸ் தொடரின் 5-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுவரும் நிலையில் இது தான் தனக்கு கடைசி போட்டி என பிராட் அறிவித்துள்ளார். அவருக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ப்ராடுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 2007 ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டியில் யுவராஜ் சிங், பிராட் வீசிய ஓவரில் 6 பந்துகளிலும் சிக்ஸர் அடித்து உலக சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிராட் ஓய்வு குறித்து, உங்களது கிரிக்கெட் பயணம் அனைவருக்கும் ஊக்கம் அளிக்கும் ஒன்று.
கிரிக்கெட்டில் நீங்கள் சாதித்தது நிறைய, நீங்கள் உண்மையான லெஜன்ட். டெஸ்ட் போட்டிகளில் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில் சிறந்த பவுலராக இருந்திருக்கிறீர்கள். வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு எனது வாழ்த்துகள் என யுவராஜ் சிங் ட்வீட் செய்துள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…