தெறிக்க விட்ட வாட்சன் – டு பிளெசிஸ் .. 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை வெற்றி..!

இன்றைய 18-வது அணியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இப்போட்டி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக கே.எல்.ராகுல்,மாயங்க் அகர்வால் இருவரும் இறங்கினர். நிதானமாக விளையாடி மாயங்க் அகர்வால் 26 ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர், இறங்கிய மந்தீப் சிங் 27 , நிக்கோலஸ் பூரன் 33 ரன்கள் எடுத்தனர்.
சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 63 ரன்கள் குவித்தார். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 178 ரன்கள் எடுத்தனர்.
179 ரன்கள் இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ஷேன் வாட்சன், டு பிளெசிஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து நிதானமாகவும், சிறப்பாகவும் விளையாடி வந்தனர். இதனால், ஷேன் வாட்சன், டு பிளெசிஸ் இருவரும் அடுத்தடுத்து அரைசதத்தை நிறைவு செய்தனர்.
பின்னர், இருவரும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் ஷேன் வாட்சன் 83*, டு பிளெசிஸ் 87* ரன்களுடன் களத்தில நின்றனர். இறுதியாக சென்னை அணி 17.4 ஓவரில் விக்கெட்டை இழக்காமல் 181 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025