ஹைதராபாத் அணி வீரர் விரித்திமான் சாஹாவுக்கு கொரோனா..!!

ஹைதராபாத் அணி வீரர் விரித்திமான் சாஹாவுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதி முறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் ஹைதராபாத் அணி வீரர் விரித்திமான் சாஹாவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கொல்கத்தா சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியார், மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த பந்துவீச்சு பயிற்சியாளர் பாலாஜி,மற்றும் வீரர்கள் செல்லும் பேருந்தின் கிளீனர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த குறிப்பிடத்தக்கது.