மைதானத்தில் ரசிகருடன் விளையாடிய தோனி வைரலாகும் வீடியோ!!!!

This news gives information about Dhoni played with a fan at the ground-maithanathil rasikarudan velaiyadiya dhoni vairalagum video

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 48.2 ஓவர்களில் 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக  விராட் கோலி 116 ரன்கள் எடுத்து இருந்தார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று  நாக்பூரில்  நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.

இதனை தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.இந்திய அணி 48.2 ஓவர்களில் 250 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.அதிகபட்சமாக  விராட் கோலி 116 ரன்கள் எடுத்து இருந்தார்.

இதனை தொடர்ந்து 251 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது ஆஸ்திரேலிய அணி.அப்போது பீல்டிங் செய்வதற்காக இந்திய அணி வீரர்கள் மைதானத்திற்கு வந்த போது ரசிகர் ஒருவர் பாதுகாப்பை தாண்டி மைதானத்துக்குள் நுழைந்தார்.

வேகமாக வந்த  ரசிகர் தோனி அருகில் செல்ல முயன்றார். இதைப் பார்த்த தோனி அந்த ரசிகரிடம் சிக்காமல் சிறிது நேரம் ஓடிப்பிடித்து விளையாடினார்.

மேலும் அந்த ரசிகர் தமிழகத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்னென்றால் அந்த ரசிகர் அணிந்து இருந்த பனியனில் “தல ” என எழுதபட்டியிருந்தது.இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது .

unknown node