ind vs eng : 28 ஓவர் முடிவில் 81 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்த இங்கிலாந்து!

As the third Test against England unfolded, England was bowled out for 81 in 28 overs for the loss of five wickets.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாம் டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், இந்தியா அணியின் பந்துவீச்சை தாங்கமுடியாமல் இங்கிலாந்து அணி, 28 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாம் டி-20 தொடர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மதியம் 2:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாக் க்ராலி – டொமினிக் சிப்லி களமிறங்கினார்கள்.

இதில் இரண்டாம் ஓவரில் ஒரு ரன் கூட எடுக்காமல் டொமினிக் சிப்லி வெளியேற, அவரையடுத்து களமிறங்கிய அதிரடி வீரர் ஜானி பைர்ஸ்டோவும் ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஜோ ரூட் 17 ரன்களில் வெளியேற, ஓல்லி போப் 1 ரன் மட்டுமே அடித்து பெவிலியன் திரும்பினார். இறுதியாக 28 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி, 5 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்தது.