ஹர்திக் பாண்டியா ஃபிட்நஸ் ரகசியம் வீடியோ மூலம் வெளியானது !

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதிலும் குறிப்பாக தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதாலும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு பிறகு ஃபிட்டான உடலை வைத்திருக்கும் வீரர் என்றால் அது ஹர்திக் பாண்டியா தான்.
ஹர்திக் பாண்டியா வேகமாக ஓடுவது , சிக்ஸர்களை அதிக தூரம் அடிப்பது என அசத்தி வருகிறார். மேலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஹர்திக் பாண்டியா கடுமையாக உழைத்துள்ளார். இந்நிலையில் அவர் ஜிம்மில் காலுக்கு பயிற்சி எடுக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் காலுக்கு சிரமப்பட்டு பயிற்சி எடுக்கும் ஹர்திக் பாண்டியா
ஒரு கட்டத்தில் பெண் பயிற்சியாளர் யாஸ்மின் கூறுவதை மீறி ஹர்திக் பாண்டியா பயிற்சியை முடிக்கிறார். மற்றோரு வீடியோவில் தனது சகோதரரும் , இந்திய அணியின் வீரருமான குருனால் பாண்டியவுடன் மைதானத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார்.
ஹர்திக் பாண்டியா உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்காக விழா மட்டும் வாரத்தின் இறுதி நாள்களில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.