Ruturaj Gaikwad [File Image]
Ruturaj Gaikwad: ஷிவம் துபேக்கு நம்பிக்கை மிக அதிகமாக உள்ளது. சொல்லப்போனால் அவர் எங்களுக்கு ஒரு பெரிய பிளஸ் என சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார்.
17ஆவது ஐபிஎல் தொடரின் 7ஆவது போட்டியில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 206 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, 207 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோல்வியடைந்தது. சிஎஸ்கே அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
போட்டி முடிந்த பின், வெற்றி குறித்து சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், இன்றைய ஆட்டம் பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் ஆகிய மூன்றும் சரியாக அமைந்தது. குஜராத் போன்ற ஒரு அணிக்கு எதிராக நாங்கள் இது போன்ற ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தியே ஆக வேண்டும்.
முதலில் நாங்கள் பந்துவீச்சைப் பொருட்படுத்தாமல் நன்றாகச் செயல்பட்டோம். பவர்பிளேயில் ரச்சின் அற்புதமாக பேட்டிங் செய்து ஆட்டத்தை எடுத்துச் சென்றார் என்பதை தனிப்பட்ட முறையில் உணர்ந்தேன். ஷிவம் துபே அதிக நம்பிக்கை கொண்டவர், மேலும் அவரது நம்பிக்கை மிக அதிகமாக உள்ளது. சொல்லப்போனால் அவர் எங்களுக்கு ஒரு பெரிய பிளஸ் என்று சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் போட்டி முடிந்த பின் கூறியிருந்தார்.
தனிப்பட்ட முறையில் பீல்டிங்கிலும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறினார். நேற்றைய ஆட்டத்தில் 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் சிவம் துபேவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.
டெல்லி : கடந்த ஏப்ரல் 22இல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல்…
மதுரை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகளில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற கிரிக்கெட் வீரர்களில் க்ளென் மேக்ஸ்வெல்லும் ஒருவர். நடப்பாண்டு ஐபிஎல்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, படத்தை சூர்யா…
சென்னை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ' ஜனநாயகன்' பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
சென்னை : கோடை காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் அளவு 100…