ஆர்சிபியின் 11 ஆண்டுகால சாதனையை அடித்து நொறுக்கிய ஹைதராபாத்!

Hyderabad broke RCBs 11-year record

MIvsSRH : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் அடித்து ஆர்சிபியின் 11 ஆண்டுகால சாதனையை ஹைதராபாத் அணி முறியடித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது என்றே சொல்லலாம். ஏனென்றால், அந்த அளவிற்கு சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகள் மட்டுமே பறந்து கொண்டு இருந்தது.  நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில்  20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்தது.

277 ரன்கள் அடிப்பது எல்லாம் டி20 கிரிக்கெட்டில் சாதாரண விஷயம் இல்லை. ஆனால், ஹைதராபாத் அணி அதிரடியாக விளையாடி இத்தனை ரன்களை குவித்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் சாதனையையும் படைத்தது பெங்களூர் அணியின் சாதனையையும் முறியடித்து இருக்கிறது. அது என்ன சாதனை என்றால் ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற சாதனை தான்.

இதற்கு முன்னதாக கடந்த 2013-ஆம் ஆண்டு புனே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி 263 ரன்கள் எடுத்து ஐபிஎல் வரலாற்றில் அதிகம் ரன்அடித்த அணி என்ற சாதனையை வைத்து இருந்தது. தற்போது 11 ஆண்டுகால அந்த சாதனையை மும்பை அணிக்கு எதிராக  277 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணி முறியடித்து அதிகம் ரன்கள் அடித்த அணி என்ற சாதனையை படைத்தது இருக்கிறது.

ஐபிஎல் வரலாற்றில் அதிகம் ரன்கள் அடித்த அணிகள் 

  1. ஹைதராபாத் – 277 ரன்கள் (2024 மும்பைக்கு எதிராக)
  2. பெங்களூர் – 263 ரன்கள் ( 2013 புனே அணிக்கு எதிராக)
  3. லக்னோ – 257 -ரன்கள் (2023 பஞ்சாப் அணிக்கு எதிராக)
  4. சென்னை -246 – ரன்கள் (2010 ராஜஸ்தான் அணிக்கு எதிராக)
  5. கொல்கத்தா -245 ரன்கள் (2018 பஞ்சாப் அணிக்கு எதிராக)

மேலும், நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 278 ரன்கள்  என்ற பிரமாண்ட இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிவரை போராடி  20 ஓவருக்கு 5 விக்கெட்டுகள் இழந்து 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஹைதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

RIP Ratan Tata
ENGW vs SCOW
diwali 2024 (1)
athirasam (1)
SA womens Won the Match
India whitewash Bangladesh
NZWvsSLW