Fafduplessis Dhoni [Image- BCCI/IPL]
என்னால் ஒருபோதும் தோனி அல்லது கோலியை போல் ஒரு கேப்டனாக இருக்க முடியாது என டு பிளெஸ்ஸி கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடிவரும் ஃபாஃப் டு பிளெஸ்ஸி, சமீபத்தில் என்டிடிவி க்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பெங்களூரு அணிக்காக விளையாடிவரும் முன்னாள் சென்னை அணி வீரர் டு பிளெஸ்ஸி தனது விளையாட்டுத்திறன் குறித்தும் கேப்டன் பதவி குறித்தும் பேசியுள்ளார்.
அப்போது அவர் பேசுகையில், நான் தலைசிறந்த கேப்டன்களின் கீழ் விளையாடியுள்ளேன், அவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். முதலில் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடும்போது க்ரேம் ஸ்மித் என்னை வழிநடத்தினார், அதன் பின் சிஎஸ்கே அணிக்காக இங்கு வந்த போது பிளெமிங்கிடம் நிறைய தலைமை குறித்த அனுபவங்களை அவரிடம் கேட்டு தெரிந்துகொண்டேன்.
ஆரம்பத்தில் தோனியை தூரத்தில் இருந்து பார்த்து வியந்திருக்கிறேன், எப்படி இவர் இவ்வளவு வெற்றிகரமான கேப்டனாக அணியை வழிநடத்துகிறார், சர்வதேச மற்றும் ஐபிஎல் போட்டிகளில் எப்படி இவரால் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக இருக்க முடிகிறது என கவனித்து வந்திருக்கிறேன். எப்படி அமைதியாக அணியை வழிநடத்துவது என்று தோனியிடம் அறிந்து கொண்டேன்.
இவை அனைத்தும் தோனி போன்ற லெஜன்ட் களிடம் நான் கற்றுக்கொள்ள எனக்கு கிடைத்த மிகப்பெரும் பாக்கியமாக கருதுகிறேன், என்னால் நிச்சயமாக தோனி, கோலி, அல்லது க்ரேம் ஸ்மித் போன்ற ஒரு கேப்டனாக இருக்க முடியாது. ஆனால் நான் எனக்கு சொந்தமாக ஒரு வழியைக் கண்டுபிடித்து தலைமையாற்றுவேன், அதை நீங்கள் அவர்களிடம் (தோனி, கோலி, அல்லது க்ரேம் ஸ்மித்) உள்ள தலைமை பண்புகளுடன் ஒப்பிட்டு பார்க்கலாம் என கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…
சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…
சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…
அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…
ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…