சாவடிச்சிடுவேன்! கோபத்தில் வீரரை கடுமையாக திட்டிய அஸ்வின்! நடந்தது என்ன?

TNPL : தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் தொடங்கி தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். நேற்று நடைபெற்ற போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் மோதியது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.அடுத்ததாக 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணி 19.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
இந்த போட்டியில் திண்டுக்கல் அணி வெற்றிபெற்றாலும் கூட போட்டியின் நடுவே கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக கோபமடைந்து அணியின் சக வீரரை திட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 16-வது ஓவரில் திண்டுக்கல் வீரர்கள் ரன் ஓடும்போது அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். இதனால் தான் அஸ்வின் மிகவும் கடுப்பாகினார்.
டக் -அவுட்டில் அமர்ந்து இருந்த அஸ்வின் வேகமாக எழுந்து சாவடிச்சிருவன் ஒழுங்கா விளையாடு என்பது போல கடும் கோபத்துடன் கத்தினார். இதனை பார்த்த அங்கிருந்த வீரர்கள் பலரும் அதிர்ச்சியாக அஸ்வினை பார்த்தார்கள். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் எம்மாடி அஸ்வினுக்கு இவ்வளவு கோபம் வருமா? என்பது போல கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
தவெக சிறப்பு ஆலோசகர் ஆகிறாரா பிரசாந்த் கிஷோர்? விஜய்யுடன் 2.30 மணி நேரம் சந்திப்பு!
February 10, 2025
கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!
February 10, 2025
NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!
February 10, 2025
2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!
February 10, 2025
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
February 10, 2025