2023-ம் ஆண்டு ஐசிசி விருதுகளுக்கான பட்டியலில் இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளனர். இந்தியாவில் இருந்து இந்த இரு வீரர்களையும் ஐசிசி பரிந்துரை செய்துள்ளது. இவர்களுடன் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவீந்திராவும் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐசிசி அனைத்து பிரிவுகளுக்கும் தலா நான்கு வீரர்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளது. அதன்படி ஐசிசியின் இந்த ஆண்டின் வளர்ந்து வரும் ஆடவர் கிரிக்கெட் வீரருக்கான தேர்வுப் பட்டியலில் இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளார். ஜெய்ஸ்வாலுடன் ரச்சின் ரவீந்திர, ஜெரால்ட் கோட்ஸி மற்றும் தில்ஷன் மதுஷங்க ஆகியோரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணிக்காக ஜெய்ஸ்வால் இதுவரை 15 டி20 போட்டிகளில் விளையாடி 430 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவர் ஒரு சதம் மற்றும் மூன்று அரை சதங்கள் அடித்துள்ளார். ஜெய்ஸ்வால் தனது ஆட்டத்தால் அனைவரையும் கவர்ந்துள்ளார். ஆனால், தற்போது நடைபெற்று வரும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரில் அவரால் சிறப்பாக எதையும் சாதிக்க முடியவில்லை.
ஐசிசியின் இந்த ஆண்டின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான பட்டியலில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளார். டி20 போட்டியில் இந்தியாவுக்காக சூர்யகுமார் யாதவ் சிறப்பாக செயல்பட்டுள்ளார். டி20 போட்டிக்கு இந்திய அணியின் கேப்டனாகவும் சூர்யகுமார் யாதவ் இருந்துள்ளார். சூர்யகுமார் யாதவ் இதுவரை 60 டி20 போட்டிகளில் விளையாடி 2141 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 சதங்கள் மற்றும் 17 அரை சதங்கள் அடித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் உடன் சிக்கந்தர் ராசா, அல்பேஷ் ரம்ஜானி, மார்க் சாப்மேன் ஆகியோரும் சிறந்த டி20 கிரிக்கெட் வீரருக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…