கடந்த 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்ததாக கிரிக்கெட் விளையாட வாழ்நாள் முழுவதும் தடை செய்யப்பட்டார்.
இந்த தடையை தற்போது சுப்ரீம் கோர்ட் நீக்கியுள்ளது
சூதாட்ட புகார் தொடர்பான வழக்கில் ஆதரவான தீர்ப்பு வெளியான பிறகு கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
‘டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் 42 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லும் போது, 36 வயதான என்னால் இன்னும் ஏன்? சில காலம் கிரிக்கெட் விளையாட முடியாது. ஸ்காட்லாந்து கிளப் கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்று மீண்டும் விரும்புகிறேன். கடந்த ஆண்டு அந்த போட்டியில் விளையாட நான் நினைத்தேன். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை. கடந்த 6 ஆண்டுகளாக முதல் தர போட்டியில் விளையாடவில்லை.