#AusvsInd: முதல் டெஸ்ட் போட்டியில் முதல் விக்கெட்டை இழந்த இந்தியா.!

India lost the first wicket in the first Test against Australia. Prithviraj Shah, the opening batsman, was out without taking any runs.

ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. தொடக்க ஆட்டக்காரரான பிரித்வி ஷா, ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடரை கைப்பற்றியதை அடுத்து தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கு இடையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று அடிலெய்டு மைதானத்தில் பகல் இரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து, தொடக்க அடக்காரரான பிரித்வி ஷா மற்றும் மாயங்க் அகர்வால் களமிறங்கினர். பிரித்வி ஷா 2 பந்துகள் விளையாடி ரன் ஏதும் அடிக்காமல் டக் அவுட் ஆனார். இந்த நிலையில் இந்திய அணி ஒரு விக்கெட் இழந்து 31 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் மாயங்க் அகர்வால் மற்றும் சேடேஷ்வர் புஜாரா விளையாடி வருகின்றனர்.