இந்தியா vs கவுண்டி செலக்ட் லெவன்: விக்கெட்டை இழந்த ரோஹித் சர்மா…!

Default Image

இன்று நடைபெற்று வரும் கவுண்டி செலக்ட் லெவன் அணிக்கு எதிரான போட்டியில்,இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா தனது விக்கெட்டை இழந்துள்ளார்.

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்துக்கு சென்றது.அதன்பின்னர்,போட்டியில் இந்திய அணியானது தோல்வியை தழுவியது.

இதனையடுத்து,5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில்,இதன் முதல் டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி தொடங்குகிறது.டெஸ்ட் போட்டிக்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ளதால் இந்திய அணி, கவுண்டி லெவன் அணியுடன் மூன்று நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது.

டாஸ் வென்ற அணி:

இந்நிலையில்,டர்ஹாமில் இன்று நடைபெறும் முதல் பயிற்சி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா,லிண்டன் ஜேம்ஸின் பந்துவீச்சில் ஜாக் கார்சன் பிடித்த கேட்ச் மூலம் 9 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார்.இதனால்,இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த போட்டிகளில் விராட் கோலி இல்லாததால்,ரோஹித் சர்மா அணியின் கேப்டனாக உள்ளார்.மேலும்,பந்துவீச்சு வரிசை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகிய இரு இடது கை சுழற்பந்து வீச்சாளர்களைத் தவிர, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில்,கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக இந்திய அணியின் விக்கெட் -கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் இப்போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படவில்லை.

கவுண்டி செலக்ட் லெவன் அணியானது, நியூசிலாந்திற்கு எதிராக சமீபத்தில் அறிமுகமான விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ஜேம்ஸ் பிரேசி மற்றும் 24 வயதான தொடக்க ஆட்டக்காரர் ஹசீப் ஹமீத் ஆகிய இரு சர்வதேச வீரர்களைக் கொண்டுள்ளது.

இந்திய அணி: ரோஹித் சர்மா, மாயங்க் அகர்வால், சேதேஸ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, விராட் கோஹ்லி (இ), ஹனுமா விஹாரி, ரவீந்திர ஜடேஜா, விருத்திமான் சஹா (வ), வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆக்சர் படேல், ஷார்துல் தாகூர், முகமது ஷாகு , ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ், இஷாந்த் சர்மா.

கவுண்டி செலக்ட் லெவன் அணி: ஜாக் சேப்பல், ராபர்ட் யேட்ஸ், ஜேம்ஸ் பிரேசி (டபிள்யூ.கே), ஹசீப் ஹமீத், ரெஹான் அகமது, ஜேம்ஸ் ரீவ், வில் ரோட்ஸ் (சி), ஜேக் லிபி, லிண்டன் ஜேம்ஸ், கிரேக் மைல்ஸ், லியாம் பேட்டர்சன்-வைட், ஈதன் பாம்பர், ஜாக் கார்சன்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்