காவலர் பணி.. உடற்தகுதி தேர்வு 26ம் தேதி துவக்கம்..!

இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகள் 26.07.2021 முதல் 20 மையங்களில் நடத்தப்படள்ளது.
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறை காவலர், இரண்டாம் நிலைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வானது கடந்த டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, மார்ச் 8-ஆம் தேதி நடைபெற இருந்த உடற்தகுதி தேர்வு ஏப்ரல் 12-ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பின்னர், சட்டமன்ற தேர்தல், கொரோனா காரணமாக உடற்தகுதி தேர்வு தொடர்ந்து ஒத்திவைக்கபப்ட்டது. இந்நிலையில், தமிழ்நாடு காவல்துறை தனது ட்விட்டரில் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான காவல் பொதுத்தேர்வு 2020 சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகள் 26. 07.2021 முதல் 20 மையங்களில் நடத்தப்படள்ளது.
விண்ணப்பதாரர்கள் அழைப்பு கடிதத்தை www.tnusrbonline.org – லிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக் குழுமம் அறிவிப்பு pic.twitter.com/FUql4GAkhj
— Tamil Nadu Police (@tnpoliceoffl) July 20, 2021