கேப்டன் ஜோ ரூட், டொமினிக் சிப்லே இருவரின் விக்கெட்டை வீழ்த்தமுடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் திணறி வருகிறது.
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லே களமிறங்கினர். நிதானமாக விளையாடிய ரோரி பர்ன்ஸ் ரிஷப் பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.
பின்னர், இறங்கிய லாரண்ஸ் வந்த வேகத்தில் 5 பந்துகளை எதிர்கொண்டு ரன் எடுக்காமல் வெளியேறினார். இந்திய அணி 2-வது விக்கெட்டை 26-வது ஓவரில் வீழ்த்தியது. அதன் பின்னர் இந்திய பந்துவீச்சாளர்கள் ஜோ ரூட், டொமினிக் சிப்லே இருவரின் விக்கெட்டை பறிக்க முடியாமல் திணறி வருகின்றனர். கேப்டன் ஜோ ரூட், டொமினிக் சிப்லே இருவரும் அதிரடியாகவும், நிதானமாகவும் விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தி வருகின்றனர்.
ஒருபுறம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கேப்டன் ஜோ ரூட், மறுபுறம் ஜோ ரூட்டிற்கு ஏற்றாற்போல நிதானமாக டொமினிக் சிப்லே விளையாடி வருகிறார். டொமினிக் சிப்லே 250 பந்தில் 83* ரன்களும், ஜோ ரூட் 185 பந்தில் 116* ரன்களுடன் விளையாடி வருகின்றனர். இங்கிலாந்து அணி 84 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழந்து 249 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை மைதானம் சூழல் பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற மைதானம் என்று கூறப்படுகிறது. இந்திய அணியில் 3 சூழல் பந்து வீச்சாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…