இந்தியாவில் ஆஸ்திரேலியா அணி பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. விராட் கோலி தலைமையிலான அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றிகரமாக 2-1 என்ற கணக்கில் வென்றது.இதனை அடுத்து நியூசிலாந்துடன் 5 டி -20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக இந்திய அணி நியூசிலாந்து சென்றுள்ளது.இந்தியா – நியூசிலாந்து மோதும் முதல் டி -20 போட்டி ஆக்லாந்தில் நாளை நடைபெறுகிறது.
இந்திய அணியை பொறுத்தவரை கடந்த ஆண்டு நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணத்தின்போது டி- 20 தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.தற்போது சென்றுள்ள நிலையில் வெற்றியுடன் இந்திய அணி தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.இந்திய அணி கடைசியாக விளையாடிய 5 -டி 20 தொடர்களில் 4 தொடரை கைப்பற்றியுள்ளது.மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிராக 3-0, 2-1 என்று 2 முறையும் , வங்க தேசம் 2-1 என்ற கணக்கிலும்,இலங்கை 2-0 என்ற கணக்கிலும் கைப்பற்றியுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரை மட்டும் 1-1 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்தது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இதுவரை 11 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளது.ஆனால் இதில் நியூசிலாந்து அணியின் ஆதிக்கமே அதிகமாக உள்ளது. நியூசிலாந்து 8 போட்டிகளில் வென்றுள்ளது.இந்திய அணி 3 போட்டிகளிலும் வென்றுள்ளது. நாளை நடைபெறுவது 12-வது போட்டியாகும்.நாளை மதியம் 12.20 மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
இந்திய அணியில் தவான் இல்லாதது சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் தவானுக்கு காயம் ஏற்பட்டது.இதனால் அந்த போட்டியில் முழுமையாக தவான் விளையாடவில்லை. தவானுக்கு காயம் ஏற்பட்டதால், நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்து விலகினார். தவானுக்கு பதிலாக நியூசிலாந்தில் இந்திய ‘ஏ’ அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் :
விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, சஞ்சு சாம்சன் , லோகேஷ் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஜடேஜா, மணிஷ் பாண்டே, பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர்,சிவம் துபே ,சைனி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…