#INDvENG: கேப்டன் மார்கன் இல்லை.. பேட்டிங் செய்ய காத்திருக்கும் இந்தியா!

#INDvENG: England won the toss and elected to bowl in the second ODI between India and England. Buttler as captain for england.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாம் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, முதலில் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. தற்பொழுது 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முத்ல் போட்டியில் இந்திய அணி 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனைதொடர்ந்து இரண்டாம் ஒருநாள் போட்டி, புனேவில் தொடங்கவுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியில் கேப்டன் மார்கன் காயம் காரணமாக வெளியேறியதை தொடர்ந்து, அவருக்கு பதில் பட்லர் கேப்டனாக பதவி வகிக்கிறார்.

விளையாடும் வீரர்கள்:

இந்தியா:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, கிருனல் பாண்டியா, ஷர்துல் தாக்கூர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், பிரசீத் கிருஷ்ணா.

இங்கிலாந்து:

ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், டேவிட் மாலன், ஜோஸ் பட்லர் (கேப்டன், விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கரண், டாம் கரண், அடில் ரஷீத், ரீஸ் டோப்லி.