#INDvSL: மூன்றாவது டி20 போட்டி – இந்திய அணிக்கு 147 ரன்கள் இலக்கு..!

கடைசி டி20 போட்டியில் இந்திய அணிக்கு இலங்கை 147 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையே இரண்டாவது டி20 ஆட்டம் இமாச்சலப் பிரதேசம் தர்மசாலாவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 17.1 ஓவர் முடிவிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.
இரு அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3 வது டி20 போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. தர்மசாலாவில் நடைபெறும் முன்றாவது டி20 போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இந்த நிலையில், கடைசி டி20 போட்டியில் இந்திய அணிக்கு இலங்கை 147 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவரில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. தசுன் ஷனகா அதிகபட்சமாக 74 ரன்களும், தினேஷ் சந்திமால் 25 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பாக அவேஷ் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025