#INDvSL : ஷ்ரேயஸ் அதிரடியில் இந்திய அணி அபார வெற்றி.!

கடைசி டி20 போட்டியில் இந்திய அணி இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் இலங்கை அணியை 3-0 என்கிற கணக்கில் இந்திய அணி மொத்தமாக வாஸ்அவுட்

கடைசி டி20 போட்டியில் இந்திய அணி இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் இலங்கை அணியை 3-0 என்கிற கணக்கில் இந்திய அணி மொத்தமாக வாஸ்அவுட் செய்துள்ளது.

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையே இரண்டாவது டி20 ஆட்டம் இமாச்சலப் பிரதேசம் தர்மசாலாவில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 17.1 ஓவர் முடிவிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதை தொடர்ந்து 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது.

unknown node

இரு அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3 வது டி20 போட்டி தர்மசாலாவில் உள்ள இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. தர்மசாலாவில் நடைபெறும் முன்றாவது டி20 போட்டியில் இலங்கை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

unknown node

இந்த நிலையில், கடைசி டி20 போட்டியில் இந்திய அணிக்கு இலங்கை 147 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை 20 ஓவரில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது. தசுன் ஷனகா அதிகபட்சமாக 74 ரன்களும், தினேஷ் சந்திமால் 25 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பாக அவேஷ் கான் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

unknown node

அதன் பிறகு களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன், ரோஹித் சர்மா ஏமாற்றம் அளித்தாலும், ஷ்ரேயஸ் ஐயர் நிலைத்து அதிரடி ஆட்டம் ஆடி 45 பந்தில் 73 ரன்கள் விளாசி இந்திய அணியை வெற்றி பெற செய்தர். அவர் உடன் ஜடேஜா 22 ரன்களுடன் களத்தில் நின்றார்.

இதன் மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை இந்திய அணி வென்று, இந்த டி20 தொடரை 3-0 என்கிற கணக்கில் வென்றுள்ளது.