இந்தியாவில் சுற்று பயணம் செய்து தென்னாபிரிக்கா அணி, 3-டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. நேற்று 2-வது போட்டி மொஹாலியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச , தென்னாபிரிக்கா அணி பேட்டிங் செய்தது.
20 ஓவர் முடிவில் தென்னாபிரிக்கா 7 விக்கெட் இழந்து 149 ரன்கள் எடுத்தது.இந்திய அணி 150 ரன்கள் இலக்குடன் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் இருவரும் களமிறங்கினர்.
ஆட்டம் தொடக்கத்திலே ரோகித் சர்மா 12 ரன்னில் வெளியேற பிறகு கேப்டன் கோலி களமிறங்கி ஷிகர் தவான் உடன் கூட்டணியில் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். நிதானமாக விளையாடி வந்த ஷிகர் தவான் அரைசதம் அடிக்காமல் 40 ரன்னில் வெளியேறினார்.
இதையடுத்து இறங்கிய ரிஷப் பண்ட் 5 ரன்னில் விக்கெட்டை இழந்தார்.பின்னர் அதிரடியாக விளையாடிய கேப்டன் கோலி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார். இறுதியாக இந்திய அணி 19 ஒவரில் 3 விக்கெட்டை இழந்து 151 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் கோலி கடைசிவரை ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் குவித்தார்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…