இன்ஸ்டா பதிவுகள் அதிரடி நீக்கம்? மும்பை அணியை விட்டு வெளியேறுகிறாரா சூர்யகுமார் யாதவ்?

மும்பை அணியின் தற்போதைய துணைக் கேப்டனான சூர்யகுமார் யாதவ் (SKY), தனது இன்ஸ்டாகிராம் பயோவில் இருந்த 'MI' என்ற பெயரையும், மும்பை அணி தொடர்பான அனைத்துப் பதிவுகளையும் அதிரடியாக நீக்கியுள்ளார்.

Hero Image

டெல்லி : ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் (MI) அணியின் தூண்கள் ஒவ்வொன்றாகச் சரிந்து வருகிறதா என்ற மிரட்சியில் இருக்கிறார்கள் அதன் ரசிகர்கள். கடந்த 48 மணி நேரமாக சோசியல் மீடியாவை உலுக்கி வரும் ஒரு முக்கிய நகர்வு, மும்பை அணியில் ஒரு மாபெரும் பிளவு ஏற்படுவதை உறுதி செய்துள்ளது.

மும்பை அணியின் தற்போதைய துணைக் கேப்டனான சூர்யகுமார் யாதவ் (SKY), தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து மும்பை இந்தியன்ஸ் தொடர்பான அனைத்துப் பதிவுகளையும் அதிரடியாக நீக்கியுள்ளார் . மேலும் தனது பயோவில் (Bio) இருந்த 'MI' என்ற பெயரையும் தூக்கியுள்ளார்.

சமீபத்தில், இந்திய டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து சூர்யகுமார் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டார். உலகக்கோப்பையை வென்று தந்த தனக்குக் கேப்டன்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் சூர்யா இருந்ததாக கூறப்படுகிறது.

அதே சமயம், இந்திய அணியையே வழிநடத்திய தனக்கு, மும்பை அணியில் ஹர்திக் பாண்டியாவின் கீழ் விளையாட வேண்டிய நிலை 2026 சீசனிலும் நீடித்தது. தற்போது சர்வதேச அளவிலும் கேப்டன்சி பறிபோனதால், 2027 மினி ஏலத்திற்கு (2027 Mini Auction) முன்பாக மும்பை அணியை விட்டு வெளியேறி, தனக்கு கேப்டன் பதவி தரும் புதிய அணிக்கு மாற சூர்யா திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூர்யா அனைத்து புகைப்படங்களையும் நீக்கினாலும், ரோஹித் சர்மா மற்றும் எம்.எஸ்.தோனியுடன் இருக்கும் ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் நீக்காமல் வைத்துள்ளார். இது எம்ஐ கார்ப்பரேட் நிர்வாகத்திற்கு அவர் காட்டும் மறைமுக சிக்னலாகவே பார்க்கப்படுகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மற்றொரு பலத்த அடியாக, தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் அணியை விட்டு வெளியேற நிர்வாகத்திடம் விருப்பம் தெரிவித்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது.

கடந்த 2026 ஐபிஎல் சீசனில் மும்பை அணி 9-வது இடம்பிடித்து படுதோல்வி அடைந்தது. மைதானத்தில் ரசிகர்கள் காட்டிய எதிர்ப்பு ஒருபுறமிருக்க, டிரஸ்ஸிங் ரூமிற்குள் (Dressing Room) இருந்த மூத்த வீரர்கள் பலரும் தனக்கு ஆதரவளிக்கவில்லை என்றும், தான் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் ஹர்திக் உணர்ந்துள்ளார்.

அதே சமயம், ஹர்திக் விலக நினைப்பதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருக்கும் சிவம் துபே மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகியோரை மும்பை அணிக்கு மாற்றிவிட்டு, ஹர்திக்கை சிஎஸ்கே-விற்கு கொண்டுவரும் ஒரு 'Mega Trade Deal' விவாதங்களும் தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளன என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இன்ஸ்டா பதிவுகள் அதிரடி நீக்கம்? மும்பை அணியை விட்டு வெளியேறுகிறாரா சூர்யகுமார் யாதவ்?