#IPL 2021: 90 ரன்களில் சுருட்டி ராஜஸ்தானை வெளுத்துக் கட்டிய மும்பை பவுலர்ஸ்!

In today's match against Mumbai in the IPL series, Rajasthan scored only 91 runs for the loss of 9 wickets.

ஐபிஎல் தொடரின் மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் ராஜஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியின் 51-வது லீக் ஆட்டத்தில் இன்று ராஜஸ்தான் அணி மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகிறது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களான எவின் லூயிஸ் 24 ரன்களும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 12 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதன் பின் வந்த கேப்டன் சஞ்சு சாம்சன், சிவம் துபே, க்ளென் பிலிப்ஸ் தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இவர்களை தொடர்ந்து வந்த டேவிட் மில்லர் உள்ளிட்ட ராஜஸ்தான் வீரர்கள் மும்பை பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறி விக்கெட்டுகளை இழந்து, இறுதியாக 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 90 ரன்கள் மட்டுமே எடுத்து.

மும்பை அணியில் சிறப்பாக பந்துவீசிய நாதன் குல்டர் நைல் 4, ஜேம்ஸ் நீஷம் 3, ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். மும்பை அணி அசத்தலான பந்துவீச்சால் ராஜஸ்தானை 91 ரன்களில் சுருட்டிய நிலையில், எளிதாக எட்டக்கூடிய 91 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியுள்ளது.