MI Eliminator [Image Source : IPLT20]
ஐபிஎல் தொடரின் இன்றைய LSG vs MI எலிமினேட்டர் போட்டியில், மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
16வது ஐபிஎல் தொடரின் பிளேஆப் சுற்று போட்டியில் இன்றைய வெளியேற்று சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 41 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 33 ரன்களும், திலக் வர்மா 26 ரன்களும், நேஹால் வதேரா 23 ரன்களும் குவித்தனர்.
இதனையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் லக்னோ அணியில் முதலில் கைல் மேயர்ஸ், பிரேரக் மன்கட் களமிறங்கினர். இதில் கைல் மேயர்ஸ் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பிரேரக் மன்கட் மற்றும் க்ருனால் பாண்டியா சொற்ப ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.
அதன்பின், மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடி காட்டி அணியின் ஸ்கோரை உயர்த்த அரைசதம் எட்டுவர் என்று எதிர்பார்த்தநிலையில் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், அடுத்தடுத்து வந்த லக்னோ அணி வீரர்கள் பெரிதாக சோபிக்காமல் விக்கெட்டுகளை இழந்து அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர்.
முடிவில், லக்னோ அணி 16.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 40 ரன்கள் குவித்துள்ளார்.
மும்பை அணியில் ஆகாஷ் மத்வால் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மும்பை அணி இரண்டாவது தகுதிச்சுற்றிற்கு முன்னேறியுள்ளது. அந்த சுற்றில் போட்டியிடும் குஜராத் மற்றும் மும்பை அணியில், வெற்றி பெரும் அணி இறுதி போட்டிக்கு தேர்வாகி, சென்னை அணியுடன் மோதும்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…