#IPL BREAKING: ராஜஸ்தான் பந்துவீச்சில் வீழ்ந்தது சென்னை..! RR அபார வெற்றி..!

RajasthanRoyals Won

ஐபிஎல் தொடரின் இன்றைய RR vs CSK போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

16-வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள், ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், சென்னை அணிக்கு எதிராக முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி, ராஜஸ்தான் அணியில் முதலில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜோஸ் பட்லர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி சிக்ஸர்களை பறக்கவிட்டு அரைசதம் விளாசினார். ஜோஸ் பட்லர் 27 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழக்க, துருவ் ஜூரல் தேவையான பந்துகளில் மட்டும் ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். முடிவில், ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் சென்னை அணியில் முதலில் களமிறங்கிய ருதுராஜ் அதிரடியாக விளையாடினார். ஒருபுறம் அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 47 ரன்களுக்கு  ஆட்டமிழக்க, மறுபுறம் கான்வே 8 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்பின் களமிறங்கிய ரஹானே 15 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்தார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபே மற்றும் மொயின் அலி பொறுப்பாக விளையாடி ரன்கள் குவித்து வந்த நிலையில், மொயின் அலி 23 ரன்கள் எடுத்து களத்தை விட்டு வெளியேறினார். மறுபுறம் அதிரடியாக விளையாடிய துபே பவுண்டரிகள், சிக்ஸர்கள் என பறக்கவிட்டு அரைசதம் விளாசினார். இருந்தும் கடைசி ஓவரில் 37 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 170 ரன்கள் மட்டுமே அடித்த சென்னை அணியை ராஜஸ்தான் அணி வென்றது.

முடிவில், ராஜஸ்தான் ராயல்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியில் அதிகபட்சமாக சிவம் துபே 52 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 47 ரன்களும், மொயின் அலி 23 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 23* ரன்களும் குவித்துள்ளனர். ராஜஸ்தான் அணியில் ஆடம் ஜம்பா 3 விக்கெட்டுகளும் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Rajnath Singh
IAF operation sindoor
IPL 2025
Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war