#IREvIND:அயர்லாந்துடனான இரண்டாவது டி20 போட்டி – இன்றைய ஆட்டத்தை கைப்பற்றுமா இந்தியா?..!

இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில்,இந்தியா மற்றும் அயர்லாந்து

இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில்,இந்தியா மற்றும் அயர்லாந்து (IRE vs IND) அணிகள் மோதும் முதல் T20 போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை டப்ளினில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில் நடைபெற்றது.இந்த தொடரில் இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா தலைமை தாங்கினார்.இந்திய அணியை ஹர்திக் வழிநடத்துவது இதுவே முதல் முறை.

போட்டிக்கு முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது.இதனையடுத்து,களமிறங்கிய அயர்லாந்து அணி 12 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்தது.அதிகபட்சமாக,ஹாரி டெக்டர் அதிக ரன்கள் எடுத்தார்.அவர் 33 பந்துகளில் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.மழைக்காரணமாக 20 ஓவர்கள் கொண்ட ஆட்டம் 12 ஓவர்களில் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து,களமிறங்கிய இந்திய அணி 9.2 ஓவர் முடிவிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.அதிகபட்சமாக,தீபக் ஹூடா 6 பவுண்டரி 2 சிக்சர் என 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.சாஹல் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில்,இரண்டாவது போட்டி இன்று (ஜூன் 28) டப்ளினில் உள்ள தி வில்லேஜ் மைதானத்தில் இன்று இரவு 9 மணிக்கு நடைபெறவுள்ளது.இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற இந்திய அணி தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில்,சொந்த மண்ணில் வெற்றியை பெற அயர்லாந்து அணி போராடும் என்று தெரிகிறது.எனவே,இந்த ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு முன்னதாக,அயர்லாந்து அணிக்கு எதிராக நான்கு டி20 போட்டியில் இதுவரை இந்திய அணி 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா கணிக்கப்பட்ட அணி:இஷான் கிஷன்,தீபக் ஹூடா,ருதுராஜ் கெய்க்வாட்,சூர்யகுமார் யாதவ்,ஹர்திக் பாண்டியா (கேப்டன்),அக்சர் படேல்,தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்),உம்ரான் மாலிக்,புவனேஷ்வர் குமார்,அவேஷ் கான்,யுஸ்வேந்திர சாஹல்.

அயர்லாந்து கணிக்கப்பட்ட அணி:பால் ஸ்டிர்லிங்,ஆண்டி பால்பெர்னி (கேப்டன்),கரேத் டெலானி,லோர்கன் டக்கர் (விக்கெட் கீப்பர்),ஹாரி டெக்டர்,ஜார்ஜ் டோக்ரெல்,ஆண்டி மெக்பிரைன்,மார்க் அடேர்,கிரேக் யங், ஜோஷ் லிட்டில்,கோனார் ஓல்பெர்ட்.