brian lara about india [File Image]
விராட் கோலி : 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி பேட்டிங் பார்ம் அதிரடியாக இல்லை என்ற விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கும் சூழலில், அவருக்கு ஆதரவாக பல கிரிக்கெட் வீரர்களும் பேசி வருகிறார்கள். அந்த வகையில், மேற்கீந்திய தீவுகள் வீரர் பிரையன் லாரா தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய பிரையன் லாரா ” ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி அதிரடியாக விளையாட முயற்சி செய்தார். 24 பந்துகளில் 24 ரன்கள் எடுத்திருந்தார். அது பெரிய விஷயம் இல்லை என்று நீங்கள் கூறலாம். ஆனால், அந்த நேரத்தில் அவருக்கும் அணிக்கும் அது முக்கியமான விஷயம் என்று நான் சொல்வேன். தொடர்ச்சியாக இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றியை பதிவு செய்து வருகிறது. இந்த கோப்பையை வெல்வதற்கு இந்தியா இன்னும் ஒரு படி நெருங்கிவிட்டது என்று நினைக்கிறேன்.
எனவே, ஒரு சில ஆட்டங்களை வைத்து விராட் கோலியை விமர்சிக்க கூடாது. அவர் வரும் போட்டிகளில் நன்றாக விளையாடுவார். நாம் அவரை பாராட்டி அவருக்கு புத்துணர்ச்சி கொடுக்கவேண்டும்.அப்போது தான் அவருக்கு மேலும் உற்சாகம் கிடைத்து நன்றாக விளையாடுவார். நாங்கள் அவரைப் பழையபடி அதிரடி ஆட்டக்காரராக பார்க்கப் போகிறோம்” எனவும் பிரையன் லாரா கூறியுள்ளார்.
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…