ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் சர்வதேச தரவரிசைப் பட்டியலில் விராட்கோலி 2-வது இடத்திலும், ரோஹித் சர்மா 3-வது இடத்திலும் தொடர்ந்து உள்ளனர்.
தென் ஆப்பிரிக்கா சுற்று பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அதில் தென் ஆப்பிரிக்கா அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், சர்வதேச ஒருநாள் போட்டியின் வீரர்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் 873 புள்ளிகளிடன் 1-வது இடத்தில் உள்ளார். இந்திய வீரர் விராட் கோலி 836 புள்ளிகளிடன் 2 -வது இடத்திலும், 801 புள்ளிகளுடன் ரோகித் சர்மா 3-வது இடத்திலும் தொடர்ந்து உள்ளனர். 4-வது இடத்தில் இருந்த ராஸ் டெய்லர் 801 புள்ளிகளுடன் இந்திய வீரர் ரோஹித் உடன் 3-வது இடத்தை பகிர்ந்து கொண்டார்.
இதே போல டி20 போட்டியின் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்கா முதல் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா வீரர் ஷம்சி 2-வது இடத்திலும், இங்கிலாந்து வீரர் அடில் ரஷித் 3 வது இடத்திலும் உள்ளார்.
unknown node