சதத்தை நழுவிய பைர்ஸ்டோவ்.. பஞ்சாப் அணிக்கு 202 ரன்கள் இலக்கு!

கிங்ஸ் லவன் பஞ்சாப் அணிக்கு 202 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்று வரும் 22 ஆம் லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கிங்ஸ் லவன் பஞ்சாப் அணிகள் மோதிவருகிறது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஜானி பைர்ஸ்டோவ் களமிறங்கினார்கள்.
இருவரும் அதிரடியாக விளையாடி வந்த நிலையில், வார்னர் – பைர்ஸ்டோவ் இருவரும் அரைசதம் விளாசினார்கள். அதிரடியாக ஆடிவந்த வார்னர் 52 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பைர்ஸ்டோவ் 97 ரன்களில் வெளியேற, அவரைதொடர்ந்து அப்துல் சமத் மற்றும் மனிஷ் பாண்டே களமிறங்கினார்கள்.
இவர்கள் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேற, இறுதியாக கேன் வில்லியம்சன் 20 ரன்கள் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு ஹைதராபாத் அணி 201 ரன்கள் அடித்தது. 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தற்பொழுது பஞ்சாப் அணி களமிறங்கவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025