LSGvsCSK: டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு.!!

ஐபிஎல் தொடரின் இன்றைய LSG vs CSK போட்டியில் டாஸ் வென்ற சென்னை லக்னோ அணி முதலில் பேட்டிங் பவுலிங் தேர்வு.
16-வது ஐபிஎல் தொடரில் இன்று இரு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் லக்னோவின் ஏகனா ஸ்டேடியத்தில் விளையாடுகின்றன.
இந்நிலையில், இன்றயை போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதன் படி முதலில் லக்னோ அணி பேட்டிங் செய்கிறது.
Match 45. Chennai Super Kings won the toss and elected to field. https://t.co/QwaagO40CB #TATAIPL #LSGvCSK #IPL2023
— IndianPremierLeague (@IPL) May 3, 2023
இன்று விளையாடும் வீரர்கள் :
சென்னை
டி கான்வே, ஆர் கெய்க்வாட், ஏ ரஹானே, எம் அலி, எஸ் துபே, ஆர் ஜடேஜா, எம்எஸ் தோனி , டி சாஹர், டி தேஷ்பாண்டே, எம் பத்திரனா, எம் தீக்ஷனா
லக்னோ
கே மேயர்ஸ், எம் வோஹ்ரா, கே ஷர்மா, என் பூரன், எம் ஸ்டோனிஸ், கே பாண்டியா , ஏ படோனி, ஆர் பிஷ்னோய், கே கௌதம், நவீன்-உல்-ஹக், மொஹ்சின் கான்
மேலும், இதுவரை 9 போட்டிகளில் விளையாடிய இரு அணிகளும் 10 புள்ளிகளைப் பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் லக்னோ அணி 3-வது இடத்திலும், சென்னை அணி 4-வது இடத்திலும் நீடிக்கின்றன. ஏற்கனவே இவ்விரு அணிகளும் மோதிய போட்டியில் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.