நண்பர் மனோபாலா மறைவு துயரத்தை அளிக்கிறது…நடிகர் கமல்ஹாசன் இரங்கல்.!!

நடிகரும், இயக்குனருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மனோபாலா, இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார்.
இவருடைய திடீர் மறைவு திரைதுறையில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த், பாரதிராஜா, சத்யராஜ், ராதிகா, ஆகியோர் இரங்கலை தெரிவித்ததை தொடர்ந்து நடிகர் கமலஹாசனும் தற்போது தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து கமல்ஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியதாவது” இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.
இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட இனிய நண்பர் மனோபாலா மறைந்த செய்தி பெரும் துயரத்தை அளிக்கிறது. சினிமாவின் ஆர்வலர் என்பதே அவரது முதன்மையான அடையாளமாக இருந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத்…
— Kamal Haasan (@ikamalhaasan) May 3, 2023