ஐபிஎல்லில் அதிக வெற்றிகள் .., ஹிட் மேன் 2-வது இடம்..!

Rohit Sharma is the second most successful captain in the IPL.

ஐபிஎல் போட்டியில் அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன்கள் பட்டியல் 2-வது இடத்தில் ரோஹித் சர்மா உள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் முதல் போட்டியிலேயே தோல்வியை தழுவி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. இதைத்தொடர்ந்து, நேற்று விளையாடிய போட்டியில் மும்பை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா 2-வது இடத்தில் உள்ளார். 71 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தை கம்பீர் உடன் சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் 110 வெற்றிகளுடன் சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி முதல் இடத்தில் உள்ளார்.