வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பௌலிங் தேர்வு செய்துள்ளது.

SRHvsMI

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு நடைபெற உள்ளது.

போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது, தற்போது டாஸ் போடப்பட்டு பிளேயிங் லெவனும் அறிவிப்பிக்கப்பட்டது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்யும்.

டாஸுக்குப் பிறகு, ஹர்திக் பாண்ட்யா தனது பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார். அதே போல், கடந்த போட்டியில் விளையாடிய அதே பதினொருவருடன் தான் விளையாடுவதாகவும் பாட் கம்மின்ஸ் கூறினார்.

நடப்பு தொடரில் இரு அணிகளும், 6 போட்டிகளில் விளையாடி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இதனால், இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்கும் முக்கியமானது. இரு அணிகளிலும் பவர் ஹிட்டர்ஸ் இருப்பதால், ரன் குவிப்பை எதிர்பார்க்கலாம்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் :

கேப்டன் பாட் கம்மின்ஸ் தலைமையிலான அணியில், டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசன், அனிகேத் வர்மா, ஹர்ஷல் படேல், ஜீஷன் அன்சாரி, முகமது ஷமி, எஷான் மலிங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் :

கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியில், ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரிட் பும்ரா, கர்ண் ஷர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்