குஜராத் அணியை வீழ்த்த மும்பை இதை பண்ணனும் - அஸ்வின் கணிப்பு!

MI அணியிடம் அதிக இந்திய சுழற்பந்து வீச்சுத் தேர்வுகள் இல்லை என அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Hero Image

மும்பை : இந்தியன்ஸ் அணிக்கு இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் அதிகம் இல்லாததால், மிட்செல் சான்ட்னர் மற்றும் ஏ.எம். கசன்ஃபர் ஆகிய இரு சுழல் பந்துவீச்சாளர்களையும் ஒன்றாக விளையாட வைக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவுறுத்தியுள்ளார்.

ஏப்ரல் 21 அன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் இந்த மாற்றத்தை செய்யுமாறு அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பரிந்துரைத்தார்.

அஸ்வின் கூறியதாவது“MI அணிக்கு இந்திய சுழல் பந்துவீச்சு விருப்பங்கள் அதிகம் இல்லை. எனவே அவர்கள் இரு சுழல் பந்துவீச்சாளர்களான சான்ட்னர் மற்றும் கசன்ஃபரை ஒன்றாக விளையாட வைக்க வேண்டும்.மேயாங்க் ராவத் கடைசி போட்டியில் விளையாடினார், ஆனால் ஒரு ஓவர்கூட பந்து வீசவில்லை. இது கேப்டன் ஹர்திக் பாண்டியா அவருக்கு பந்து வீச்சில் நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறது.

மேலும், ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு ஆதரவாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் அஸ்வானி குமாரை அணியில் சேர்க்க வேண்டும்” என்றார்.பும்ராவின் தற்போதைய பார்ம் குறித்தும் அஸ்வின் பேசினார். ஐந்து போட்டிகளில் 8.63 என்ற decent Economy Rate-ஐ வைத்திருந்தாலும், இதுவரை ஒரு விக்கெட் கூட எடுக்காதது கவலைக்குரிய விஷயம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.குஜராத் டைட்டன்ஸ் அணிக்கான பரிந்துரை

குஜராத் அணியில் இரண்டு மாற்றங்களை அஸ்வின் பரிந்துரைத்தார். க்ளென் பிலிப்ஸுக்கு பதிலாக ஜேசன் ஹோல்டரை அணியில் சேர்க்கலாம் என்றார். மேலும், கருப்பு மண் பிட்சில் விளையாடினால் இரண்டாவது சுழல் பந்துவீச்சாளராக சாய் கிஷோர் அல்லது மனவ் சுதர் (இருவரும் இடது கை சுழல் பந்துவீச்சாளர்கள்) ஆகியோரில் ஒருவரை சேர்க்கலாம் என்று கூறினார்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர் "GT அணியின் பலம் பேட்டிங் அல்ல, பந்துவீச்சுதான். ரபாடாவை விளையாட வைப்பது சரி, ஆனால் பிலிப்ஸுக்கு பதிலாக ஜேசன் ஹோல்டரை கொண்டு வருவது அணியை இன்னும் வலுப்படுத்தும். அவர் புதிய பந்தில் நல்ல விருப்பமாக இருப்பார்” என்று அஸ்வின் முடித்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி கடைசியாக பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்த நிலையில், அஸ்வினின் பரிந்துரைகள் MI அணியின் அடுத்த போட்டிக்கு முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஏப்ரல் 21 அன்று குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் MI அணி எந்த மாற்றங்களை செய்யும் என்பது ஆர்வமூட்டும் விஷயமாக உள்ளது.

குஜராத் அணியை வீழ்த்த மும்பை இதை பண்ணனும் - அஸ்வின் கணிப்பு!