மீண்டும் கோலியை சீண்டிய நவீன் உல்-ஹக்…வைரலான இன்ஸ்டா ஸ்டோரி.!

Navin InstaStory

நேற்று மும்பைக்கு எதிராக தோல்வி அடைந்த பெங்களூரு அணியை நவீன் உல்-ஹக் ட்ரோல் செய்து இன்ஸ்டா ஸ்டோரி பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் நேற்று வான்கடேவில் நடைபெற்ற மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டியில் மும்பை அணி பெங்களூரு அணியின் 200 ரன்கள் இலக்கை 16.3 ஓவர்களில் அடித்து அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய சூர்யகுமார், வதேரா மற்றும் இஷான் ஆகியோரின் உதவியால் சீக்கிரமே இலக்கை எட்டியது.

இதில் பெங்களூரு அணியை சீண்டும் விதமாக, லக்னோ அணி வீரர் நவீன் உல்-ஹக் தனது இன்ஸ்டாவில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பாக RCB மற்றும் LSG க்கு இடையேயான போட்டியின்போது கோலி மற்றும் நவீன் உல்-ஹக் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, இதையடுத்து கம்பிர் மற்றும் கோலிக்கும் இதே போட்டியின் முடிவில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நவீன் உல்-ஹக் பதிவிட்டுள்ள இன்ஸ்டா ஸ்டோரி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.<

/p>

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்