ஐபிஎல் 2024 : பந்து வீச்சில் மிரட்டிய ராஜஸ்தான்... சீட்டு கட்டுபோல சரிந்த பஞ்சாப்..!

ஐபிஎல் 2024:  பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

PBKSvRR

ஐபிஎல் 2024:பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இன்றைய ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் அணியும் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற  ராஜஸ்தான அணி முதலில் பந்து வீச தேர்வு செய்து. அதன்படி பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக  அதர்வா டைடே,  ஜானி பேர்ஸ்டோவ் இருவரும் களமிறங்கினர்.

பஞ்ச பணிஅணிக்கு இன்றைய போட்டியில் சிறப்பாக அமையவில்லை, காரணம் தொடக்க வீரர்கள் இருவருமே தலா 15 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து வந்த பிரப்சிம்ரன் சிங் 10 ரன்களிலும், கேப்டன் சாம் கரன் 6 ரன் எடுத்து அடுத்தடுத்து விக்கெட் இழந்தன. இதனால் பஞ்சாப் அணி 70 ரன்களுக்கு 5 விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இருப்பினும் மத்தியில் இறங்கிய ஜிதேஷ் சர்மா 29 ரன்கள் எடுக்க கடைசியில் இறங்கிய  அசுதோஷ் சர்மா 16 பந்தில் 31 ரன்கள் எடுக்க இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தனர். ராஜஸ்தான் அணியில் கேசவ் மகாராஜ், அவேஷ் கான் தலா  2 விக்கெட்டையும்,  யுஸ்வேந்திர சாஹல், டிரெண்ட் போல்ட், குல்தீப் சென் தலா 1 விக்கெட்டை பறித்தனர்.