இன்றைய 31-வது போட்டியில் பெங்களூர் Vs பஞ்சாப் அணிகள் மோதியது. இப்போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
பெங்களூர் அணியில் தொடக்க வீரர்களாக படிக்கல், ஆரோன் பிஞ்ச் இருவரும் இறங்கினர். நிதானமாக விளையாடி வந்த படிக்கல் 18 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்த இரண்டு ஒவரில் ஆரோன் பிஞ்ச் 20 ரன்னில் விக்கெட்டை இழக்க , பின்னர் களம் கண்ட கேப்டன் கோலியின் சிறப்பான ஆட்டத்தால் அணியின் எண்ணிக்கை உயர்ந்தது.
சிறப்பாக விளையாடி வந்த கோலி அரைசதம் அடிக்காமல் 48 ரன்னில் பெவிலியன் சென்றார். இறுதியாக பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தனர். பஞ்சாப் அணி 172 ரன்கள் இலக்குடன் தொடக்க வீரர்களாக மாயங்க் அகர்வால், ராகுல் இருவரும் இறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே இருந்து இருவரும் அதிரடியாக விளையாடினர்.
சிறப்பாக விளையாடி வந்த மாயங்க் அகர்வால் 45 ரன்கள் எடுத்தார். பின்னர், இறங்கிய யுனிவர்ஸ் பாஸ் கெய்ல் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த அடுத்தடுத்து கே.எல் ராகுல், கெய்ல் இருவரும் அரைசதம் விளாசினர்.
நிதானமாக விளையாடி வந்த கெய்ல் 52 ரன்னில் விக்கெட்டை இழக்க இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 177 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசிவரை களத்தில் கே.எல் ராகுல் 61 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் நின்றனர்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…