நேற்று முன்தினம் ஹெடிங்லி மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணியும் , இலக்கை அணியும் மோதியது.போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.
முதலில் களமிங்கிய இலங்கை 7 விக்கெட்டை பறிகொடுத்து 50 ஓவரில் 264 ரன்கள் எடுத்தது. 265 ரன்கள் இலக்குடன் அடுத்ததாக இறங்கிய இந்திய அணி 43.3 ஓவரில் 265 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி வாகை சூடியது.
இப்போட்டியில் ரோஹித் சர்மா ஆட்டம் தொடக்கத்திலே இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதன் மூலம் 94 பந்தில் 103 ரன்கள் அடித்தார்.ரோஹித் சர்மா கடைசியாக விளையாடிய இரண்டு லீக் போட்டிலும் சதம் விளாசினார்.
இந்நிலையில் ஒருநாள் போட்டியில் தொடர்ந்து விளையாடிய மூன்று போட்டிலும் சதம் அடித்த வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்தார். சங்கரகரா தொடர்ந்து நான்கு போட்டிகளில் சதம் விளாசி முதலிடத்தில் உள்ளார்.
கடைசியாக கடந்த ஆண்டு கோலி தொடர்ந்து மூன்று போட்டிகளில் சதம் விளாசினார்.அதன் பின் தற்போது ரோஹித் சர்மா தான் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…