ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்லப்பட்ட ரசல்...! வைரலாகும் வீடியோ ..!

வெஸ்ட் இண்டீஸில் தற்போது கரீபியன் பிரீமியர் லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று ஜமைக்கா தல்லாவாஸ் மற்றும்  செயின்ட் லூசியா ஸோக்ஸ் ஆகிய அணிகள் மோதினர்.

வெஸ்ட் இண்டீஸில் தற்போது கரீபியன் பிரீமியர் லீக் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று ஜமைக்கா தல்லாவாஸ் மற்றும்  செயின்ட் லூசியா ஸோக்ஸ் ஆகிய அணிகள் மோதினர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற செயின்ட் லூசியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஜமைக்கா தல்லாவாஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 170 ரன்கள் அடித்தது. பின்னர் 171 ரன்கள் இலக்கு களமிறங்கிய செயின்ட் லூசியா அணி  16.4 ஒவரிலே 171 ரன்கள் இலக்கை அடித்து வெற்றி பெற்றது.

unknown node

இப்போட்டியில் ஜமைக்கா தல்லாவாஸ் அணி வீரர் ஆண்ட்ரே ரசல்  14 வது ஓவரின் ஹார்டஸ் வில்ஜோன் வீசிய பவுன்சர் பந்தை அடிக்காமல் விட்டார்.இதனால் அந்த பந்து ரசல் ஹெல்மேட் வலது புறத்தில் உள்ள காது பக்கம்  அடித்தது.பந்து அடித்த வேகத்திலே ரசல் சுருண்டு கீழே விழுந்தார்.

பின்னர் மைதானத்திற்கு வந்த மருத்துவ குழு ரசலை  ஸ்ட்ரெச்சரில் அழைத்து சென்றனர்.பிறகு  சிடி ஸ்கேன் பரிசோதனையில் பலத்த காயம் ஏற்படவில்லை என மருத்துவர்கள் கூறினார்.ரசல் ஓய்வு எடுக்கவேண்டும் என கூறினார்கள்.

ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்லப்பட்ட ரசல்...! வைரலாகும் வீடியோ ..!