கடைசி போட்டியிலும் ருதுராஜ்க்கு ஏமாற்றம் – கே.எல்.ராகுல் மீது ரசிகர்கள் கடும் விமர்சனம்!

Default Image

இந்திய அணிக்கு தேர்வான ருதுராஜ் கெய்க்வாட்க்கு, கடைசி போட்டியிலும் வாய்ப்பு வழங்காததால் கே.எல்.ராகுல் மீது ரசிகர்கள் கடும் விமர்சனம். 

தென்னாப்பிரிக்கவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி நேற்று முன்தினம் போலண்ட் பூங்கா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தென்னாபிரிக்கா அணி அபாரமாக விளையாடி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இதனிடையே, ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி, விளையாடும் லெவனில் மாற்றங்களை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. அதாவது, இந்திய அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பல் காரணமாக அணியில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இருவரில் ஒருவர் லெவனில் இடம் பிடிப்பர் என எதிர்பார்க்கப்பட்டது.

ஒருநாளை தொடரை கைப்பற்றும் விதமாக கேப்டன் கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் களம் இறங்க வேண்டும் என்றும் அப்படி அவர் செய்தால் ருதுராஜ் கெய்க்வாட் தொடக்க வீரராக களமிறங்குவார் என கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவித்தனர். அப்படி இல்லையெனில், இந்த மாற்றத்தை செய்ய தவறினால் கோலிக்கு அடுத்த சூர்யகுமார் யாதவ் இறங்குவார் என்றும் கணிக்கப்பட்டது.  ஆனால், அப்போட்டியில் இருவருக்கும் இந்திய அணி லெவனில் இடம்பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அணி தேர்வு குறித்து கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் இந்திய அணி தேர்வர்களை கடும் விமர்சனம் செய்தனர். இதன்பின் இன்று நடைபெறும் முன்றாவது ஒருநாள் போட்டியிலாவது இடநிஐ அணியில் மாற்றம் நிகழும் என்றும் பெஞ்ச்யில் இருக்கும் ருதுராஜ்க்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், தென்னைப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியிலும் இந்திய அணியில் ருதுராஜ்க்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் ருதுராஜ், இன்று நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பாக்கப்பட்ட நிலையில், ஏமாற்றமே மிஞ்சியது. இதனால், கேப்டன் கே.எல்.ராகுல் கேப்டன்ஷிப் குறித்து சமூக வலைத்தளங்களில் காரசமாக விமர்சனம் செய்து வருகின்றன.

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடியாததால் இந்திய அணிக்கு தேர்வான ருதுராஜ் கெய்க்வாட், ஆடும் லெவனில் இடம்பிடிப்பார் என பலரும் எதிர்பார்த்த நிலையில், கடைசி போட்டியிலும் ருதுராஜ்க்கு வாய்ப்பு வழங்காததால் கே.எல்.ராகுல் மீது ரசிகர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனிடையே, நியூலேண்ட்ஸ், கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது (கடைசி) ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணி லெவன்: கேஎல் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ஜெயந்த் யாதவ், பிரசித் கிருஷ்ணா, தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

IPL2025 Sanju Samson
ShubmanGill
chiranjeevi - RAM SARAN
Bus Accident
marcus stoinis
O. Panneerselvam