முதல் பந்திலேயே சிக்ஸ்… டி20யில் ரெக்கார்ட் வைத்த சஞ்சு சாம்சன்.!

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணியில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அசத்தினார்.

sanju samson

மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் 247 ரன்கள் குவித்தது. 

இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து 97 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது. அதிலும் நேற்றைய ஆட்டத்தில் குறிப்பாக, இந்திய வீரர் சஞ்சு சாம்சன், முதல் பாலிலேயே சிக்ஸ் அடித்து ஆட்டத்தை தொடங்கினர்.

ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தை, சஞ்சு சாம்சன் அசால்டாக சிக்ஸர் பறக்கவிட்டார். இதனால், மைதானத்தில் இருந்த ரசிகர்களின் ஆரவாரம் குறைவதற்குள் 5வது பந்தை சிக்ஸர் அடிக்க, கடைசி பந்தை பவுண்டரி என பறக்கவிட்டு முதல் ஓவரிலேயே 16 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம் டி20யின் முதல் பந்தில் சிக்ஸர் அடித்த மூன்றாவது இந்திய வீரராக சஞ்சு சாம்சன் உருவெடுத்துள்ளார். இதற்கு முன்னர் ரோஹித், ஜெய்ஸ்வாலும் போட்டியின் முதல் பந்தில் சிக்ஸ் அடித்துள்ளார்கள். அதன்படி, ரோஹித் சர்மா கடந்த 2021 அகமதாபாத் மைதானத்திலும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2024ம் ஆண்டு ஹராரே மைதானத்திலும் அடித்துள்ளனர்.

இருப்பினும், அதிரடியாக தனது ஆட்டத்தை தொடங்கிய சஞ்சு சாம்சன், 7 பந்துகளில்  16 ரன்களில் ஆட்டமிழந்தார். சொல்லப்போனால், 5 போட்டிகளில் வெறும் 35 ரன்களை மட்டுமே சஞ்சு சாம்சன் அடித்துள்ளார். இதனால், நடப்பு டி20 தொடரில் சஞ்சு சாம்சனின் பார்மில் சிறிது தடுமாற்றம் இருப்பதாக நெட்டிசன்கள் சிலாகித்து வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்