WIvSL: டாஸ் வென்ற இலங்கை.. ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை பழிவாங்குமா?

Sri Lanka won the toss and elected to bat in the first ODI between West Indies and Sri Lanka, holding at Vivian Richards Stadium in Antigua.

வெஸ்ட் இண்டீஸ் – இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் ஒருநாள் தொடரில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, 3 டி-20, 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் டி-20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி, 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைதொடர்ந்து முதல் ஒருநாள் போட்டி, இன்று முதல் தொடங்குகிறது. ஆன்டிகுவாவில் உள்ள விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

விளையாடும் வீரர்கள்:

வெஸ்ட் இண்டீஸ்:ஷாய் ஹோப் (விக்கெட் கீப்பர்), எவின் லூயிஸ், ஜேசன் முகமது, டேரன் பிராவோ, நிக்கோலஸ் பூரன், கீரோன் பொல்லார்டு (கேப்டன்), ஜேசன் ஹோல்டர், ஃபேபியன் ஆலன், ரொமாரியோ ஷெப்பர்ட், அல்சாரி ஜோசப், அகீல் ஹொசைன்.

இலங்கை:திமுத் கருணாரத்னே (கேப்டன்), தனுஷ்கா குணதிலகா, பாதம் நிசங்கா, தினேஷ் சந்திமல் (விக்கெட் கீப்பர்), ஏஞ்சலோ மேத்யூஸ், ஆஷென் பண்டாரா, காமின்டு மெண்டிஸ், வாணிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, லக்ஷன் சந்தகன்.