SAvAFG : இறுதி வரை போராடிய ரஹ்மத் ஷா! வெற்றியை தட்டி தூக்கிய தென் ஆப்பிரிக்கா! 

சாம்பியன்ஸ் டிராபியின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வீழ்த்தியது.

SAvAFG - SA beat AFG By 107 runs

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோததின.  இந்தப் போட்டி பாகிஸ்தான் கராச்சி கிரிக்கெட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கியது.  டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங் தேர்வு செய்தார்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர் ரியான் ரிக்கல்டன் நிலைத்து ஆடி 106 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 103 ரன்கள் சேர்த்தார். கேப்டன் டெம்பா பவுமா 58 ரன்களும்,  ரஸ்ஸி வான் டெர் டுசென் 52 ரன்களும், டோனி டி ஜோர்ஜி 11 ரன்களும், டேவிட் மில்லர் 14 ரன்களும் எடுத்து அவுட் ஆகினர். ஏடன் மார்க்ரம் இறுதி வரை அட்டமிழக்காமல் 36 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸர் உட்பட 52 ரன்கள் எடுத்தார். 50 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்தது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் முகமது நபி 2 விக்கெட்டுகளையும், நூர் அகமது, ஃபசல்ஹாக் ஃபரூக்கி, அஸ்மதுல்லா உமர்சாய் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.  முதல் முறையாக சாம்பியன்ஸ் டிராபி விளையாடும் ஆப்கானிஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றிபெற 50 ஓவர்களில் 316 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் களமிறங்கியது.

ஆனால், சீரான இடைவெளியில் ஆப்கானிஸ்தான் அணி அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தது. ரஹ்மானுல்லா குர்பாஸ் 10 ரன்னிலும், இப்ராஹிம் சத்ரான் 17 ரன்னிலும், செடிகுல்லா அடல் 16 ரன்னிலும், அஸ்மதுல்லா உமர்சாய் 18 ரன்னிலும், முகமது நபி 8 ரன்னிலும், குல்பாடின் நைப் 13 ரன்னிலும்,  ரஷீத் கான் 18 ரன்னிலும், நூர் அகமது 9 ரன்னிலும்அவுட் ஆகினர். கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதி ரன் எதுவும் எடுக்காமல்டக் அவுட் ஆகினார்.

ஒரு பக்கம் மளமளவென விக்கெட்டுகள் சரிந்தாலும் இறுதி வரை ஒற்றை ஆளாக ரஹ்மத் ஷா போராடினார். இறுதியில் 92 பந்துகளில் 9 பவுண்டரி, 1 சிக்ஸர் அடித்து 90 ரன்கள் எடுத்து ரபடா பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார். இதனை அடுத்து 43.3 ஓவரில் ஆப்கானிசத்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies