டி-20 உலகக்கோப்பையில் நேற்று பெர்த்தில் நடந்த போட்டியின் போது மைதானத்தின் உச்சியில் இருந்து வர்ணனை செய்ததாக ஐசிசி, வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி-20 உலககோப்பையின் சூப்பர்-12 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நேற்று பெர்த்தில் நடந்த பாகிஸ்தான்-நெதர்லாந்து போட்டியின் போது தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த வர்ணனையாளரான நட்டாலி ஜெர்மனோஸ் பெர்த் மைதானத்தின் உயரமான இடத்திற்கு சென்று வர்ணனை செய்துள்ளார்.
இந்த உயரமான இடத்தை விட வர்ணனைக்கு சிறந்த இடத்தை தேடுவதற்கு நேரமாகும் என்று நட்டாலி ஜெர்மனோஸ் கூறியுள்ளார். இது குறித்து ஐசிசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து “மேகத்திலிருந்து கமெண்ட்ரி” என்று கூறியுள்ளது.
View this post on Instagram