சடசடவென சரிந்த SRH-ன் ‘டைனோசர்’ கூட்டணி! வெற்றி களிப்பில் கொல்கத்தா!
SRHஅணியின் தொடக்க வீரர்களான டிராவில் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் KKR பந்துவீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர்.

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற SRH அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து களமிறங்கிய KKR அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில் வெங்கடேஷ் ஐயர் (60), ரிங்கு ரிங் (32) விளாசி அணியின் ஸ்கோரை 200 ரன்களுக்கு உயர்த்தினர்.
SRH அணி முதல் போட்டியிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக 286 ரன்கள் அடித்து கடந்த ஐபிஎல் போல இந்த ஐபிஎல்-லும் SRH-ன் ‘டைனோசர்’ பேட்டிங் லைன் அப் வந்துவிட்டது என நெட்டிசன்கள் மீம் போட ஆரம்பித்தனர். ஆனால் முதல் போட்டியில் இருந்த வேகம் அடுத்தடுத்த போட்டிகளில் சுத்தமாக இல்லை என்றே கூற வேண்டும்.
லக்னோவுடனும் சரி, டெல்லி உடனும் சரி 200 ரன்களை அடிக்கவே திணறி தொடர் தோல்வி கண்டது. தற்போது 3வது போட்டியான இன்று KKRக்கு எதிரான ஆட்டத்திலும் SRH-ன் டைனோசர் பேட்டிங் லைன் அப் சொதப்பி விட்டது.
முதல் ஓவரில் டிராவிஸ் ஹெட் (4), 2வது ஓவரில் அபிஷேக் சர்மா (2), 3வது ஓவரில் இஷான் கிஷான் (2), 7வது ஓவரில் நிதிஷ் ரெட்டி (19), 10வது ஓவரில் கமிந்து மென்டிங் (27) என அவுட் ஆகி தடுமாறி வருகின்றனர். 12 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்து உள்ளது. 48 பந்தில் 117 ரன்கள் தேவை என்ற நிலையில் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது. இதனால் தற்போது வெற்றி முகம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கே பிரகாசமாக உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025