இன்றைய போட்டியில் இலங்கை Vs வெஸ்ட் இண்டீஸ் மோதல் !

இன்றைய போட்டியில் இலங்கை Vs வெஸ்ட் இண்டீஸ் அணி மோத உள்ளது.இப்போட்டி
செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்ரில் உள்ள ரிவர்சைடு மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவுள்ளது.
இலங்கை அணி இதுவரை இரண்டு போட்டிகளில் வெற்றியும் , மூன்று போட்டிகளில் தோல்வியும் அடைந்து உள்ளது.அதில் இரண்டு போட்டி மழையால் ரத்தானது .இதனால் புள்ளி பட்டியலில் இலங்கை ஆறு புள்ளிகள் பெற்று ஏழாவது இடத்தில் உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி இதுவரை ஒரு போட்டியில் வெற்றியும் , ஐந்து போட்டிகளில் தோல்வியும் அடைந்து உள்ளது.அதில் ஒரு போட்டி மழையால் ரத்தானது .இதனால் புள்ளி பட்டியலில் வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று புள்ளிகள் பெற்று ஒன்பதாவது இடத்தில் உள்ளது.